அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு
அழகுப் பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
முழுச் சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன - ஒரு
மந்திரம் செஞ்சதப்போல் பல மாயங்கள் செஞ்சதென்ன
இது பூவோ பூந்தேனோ
பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனி
தேனடி அந்தத் திருவடி அவ தேவலோக ராளி
தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ
அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ
ரத்தினம் கட்டின பூந்தேரு ஒங்களப் படச்சதாரு
என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு
இது பூவோ பூந்தேனோ
மான்விழி அவ தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்
பூ நெறம் அவ பொன்னெறம் அவ சிரிக்க நெனப்பு செதறும்
சேலப் பூவு ஜாலம்போடும் ராசிதான்
அவ ஏலத்தோடு ஜாலம்போடும் ராசிதான்
மொட்டுக்கள் இன்னிக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேனோ
No comments:
Post a Comment